தா.பழூர் பகுதி விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தா.பழூர், ஆக. 30: அரியலூர் மாவட்டம் தா. பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், வழிபாடு செய்யப்பட்ட 35 விநாயகர் சிலைகள் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தா.பழூர், தலைப்புடன் சிலால், கோடங்குடி, சிந்தாமணி,...

காய்கறி பயிர்களில் விதை நேர்த்தி தொழில்நுட்பம்

தா.பழூர், ஆக. 30: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் விதை நேர்த்தி குறித்த தொழில்நுட்பம் ஆலோசனைகளை வழங்கினர். இதுகுறித்து, கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் கூறுகையில், டிஎன்ஏயூ விதை அமிர்தத்தை,...

அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளின் வடிகால் வசதிகள் சீரமைப்பு பணிகள்

அரியலூர், ஆக. 30: அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் வடிகால் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் தலைமைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் உத்தரவின்படியும் கோட்டப் பொறியாளர் வழிகாட்டுதலின்படியும் பருவமழை தொடங்க உள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் மாநில சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளில்...

அரியலூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோளம் விதைகள்

ஜெயங்கொண்டம், ஆக.29: அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு...

குமணந்துறை கிராமத்தில் ஏரிக்கரையை சுற்றி மரக்கன்றுகள் நடவு பணி

தா.பழூர், ஆக.29: தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் ஊராட்சி குமணந்துறை கிராமத்தில் சமுத்திரம் ஏரி கரையை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. தமிழக அரசு பசுமை தமிழகம் திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் குமணந்துறை கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு நூறு நாள்...

அரியலூர் நகர்மன்ற சாதாரண கூட்டம்

அரியலூர், ஆக.29: அரியலூர் நகர் மன்றத்தில் நேற்று நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரியலூர் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளா் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் வெள்ளத்துரை...

குன்னம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டி வினா விடை தொகுப்பு

குன்னம், ஆக. 27: குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிகளில் வழிகாட்டி வினா விடை தொகுப்பினை மாணவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இதே போல் வேப்பூர் ஒன்றியம் பெரியம்மாபாளையம் ஒதியம் மருவத்தூர் பேரளி பீல்வாடி எழுமூர் காருகுடி பெருமத்தூர் நன்னை வேப்பூர் பரவாய் வரகூர் புது வேட்டக்குடி காட்டூர் பள்ளிகளில் வழிகாட்டி வினா, விடை தொகுப்பினை...

கார்- பைக் மோதல் முதியவர் பலி

க.பரமத்தி, ஆக. 27: கார்பைக் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். கரூர் மாவட்டம் புஞ்சைகாளகுறிச்சி அருகே காசிபாளையம் காலனியை சேர்ந்தவர் முத்தன்(65). இவர். சொந்த வேலையாக ஊரில் இருந்து பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி சென்றுள்ளார். அப்பொழுது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ்...

நாயகனைப்பிரியாள் கிராமத்தில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தா.பழூர், ஆக.27: அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி த.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயகனைபிரியாள் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால் கடந்த நான்கு ஆண்டுகளாக துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்கள், மாவட்ட...

தா. பழூரில் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் 5ஜி செல்போன் கேட்டு ஆர்ப்பாட்டம்

தா.பழூர், ஆக.22: தா.பழூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு...