தேவையான பொருட்கள்
ப்ரோக்கோலி - 1 (சிறு துண்டுகளாக
நறுக்கியது)
வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு - 1
பூண்டு - 2-3 பற்கள்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை:
ப்ரோக்கோலியைச் சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் நன்கு கழுவி தனியாக வைக்கவும். ஒரு குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய காய்கறிகளுடன் கழுவி வைத்துள்ள ப்ரோக்கோலி, தண்ணீர், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். குக்கரில் வேகவைத்த காய்கறிகளை குளிர்ந்த பின் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து, பின்னர் ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டவும். பின்னர், வடிகட்டிய சூப்பை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து, கொதிக்க விடவும். ப்ரோக்கோலி சூப் தயார்.

