Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமாரின் இல்ல திருமண விழா திருமுல்லைவாயிலில் நேற்று நடைபெற்றது. இதில், ஆவடி எம்எல்ஏ சாமு.நாசர் கலந்துகொண்டு, மணமக்கள் கே.பிரீத்தி- ஏ.கே.எம்.சரத்குமார் ஆகியோரை வாழ்த்தினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமார் - ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார் ஆகியோரது மகள் கே.பிரீத்தி என்பவருக்கும், கே.முத்து - எம்.மகேஸ்வரி ஆகியோரது மகனும், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளருமான ஏ.கே.எம்.சரத்குமார் என்பவருக்கும் திருமண விழா திருமுல்லைவாயலில் நடைபெற்றது.

விழாவிற்கு ஒன்றிய செயலாளர்கள் தங்கம் முரளி, பி.ஜெ.மூர்த்தி, ஆ.சத்தியவேலு ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய நிர்வாகிகள் பி.ஜெ.முனுசாமி, ஜி.பாஸ்கரன், டி.பாஸ்கர், இ.சுப்பிரமணி, வி.நாகலிங்கம், எஸ்.உமா சீனிவாசன், ஆர்.லோகநாதன், ஏ.சுப்பிரமணி, வி.ஸ்ரீதர் ஆளவந்தான், என்.தங்கராஜ், விஜயகுமார், எம்.ரஞ்சித், கண்ணன், சத்தியா, பிரசாத், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த திருமணத்தில் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சாமு.நாசர் எம்எல்ஏ, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏக்கள் ஐ.பரந்தாமன், ஜோசப் சாமுவேல்,

துரை சந்திரசேகர், மாநில நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், பிரபு கஜேந்திரன், சி.ஜெரால்டு, மாவட்ட நிர்வாகிகள் மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதர், பா.நரேஷ் குமார், த.எத்திராஜ், ஜி.விமல் வர்ஷன், காஞ்சனா சுதாகர், ஜெ.மகாதேவன், கதிரவன், என்.எல்.ரவி, ரமேஷ், ஏ.வி.ராமமூர்த்தி, தேவேந்திரன், ஆர்.டி.இ.உதயசூரியன், ப.செ.குணசேகரன், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் டி.தேசிங்கு, தி.வை.ரவி, ஆர்.ஜெயசீலன், சே.பிரேம் ஆனந்த், தி.வே.முனுசாமி, பேபிசேகர், பொன்விஜயன், கி.வே.ஆனந்த், செல்வசேகரன், கே.சுரேஷ்குமார், ஜி.சி.சி.கருணாநிதி, ஆர்.செந்தாமரை, டி.கே.பாபு, விஜெ.உமாமகேஸ்வரன், வி.தியாகராஜன், அக்னி ராஜேஷ், கு.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். முடிவில் கே.பிரதீப் குமார் நன்றி கூறினார்.