Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6வது முறையாக அண்டார்டிகா சிகரத்தை தொட இருக்கும் வீராங்கனைக்கு எம்எல்ஏ ரூ.1 லட்சம் நிதியுதவி

செங்கல்பட்டு: 6வது முறையாக அண்டார்டிகா சிகரம் தொட இருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து வாழ்த்து தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி(35). திருமணமான இவர் தனிப்பட்ட முறையில் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் வெளிநாட்டு கம்பெனிகளில் பணியாற்றுபவர்களுக்கு ஜப்பான் மொழி பெயர்ப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஐரோப்பா போன்ற அனைத்து கண்டங்களில் உள்ள அனைத்து பனிமலைகளில் ஏறி உச்சத்தை தொடவேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார்.

அதற்கான பணிகளில் தமிழ்ச்செல்வி முழுமையாக ஈடுபட்டு வந்தார். தீவிர முயற்சியின் விளைவாக முதன்முதலாக ஆசிய கண்டத்தில் உள்ள பனி மலையில் ஏறி உச்சத்தை தொட்டார். இரண்டாவதாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள மௌண்ட் எல்ட்ரஸ், மூன்றாவதாக ஆப்பிரிக்கா கண்டம் மௌன்ட் கிலிமஞ்சாரோ மலைகளில் ஏறி சிகரத்தை அடைந்தார். அதனைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா கண்டம் மவுன்ட் அகன்ககோவா மலை, ஐந்தாவதாக ஆஸ்திரேலியா கண்டம் மவுண்ட் கெசியஸ்கோ மலை என ஐந்த கன்டங்களில் உள்ள பனி சிகரத்தின் உச்சத்தை தொட்டு தமிழ்நாட்டிற்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.

இதன்தொடர்ச்சியாக, முத்தமிழ்ச்செல்வி வரும் நவம்பர் மாத இறுதியில் 6வது முறையாக அண்டார்டிகா கண்டத்தில் உள்ள மிக உயரமான பனி மலையின் உச்சத்தை தொட்டு சாதனையை தொடர உள்ளார். சாதனை தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.2 லட்சம் காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், முத்தமிழ்ச்செல்விக்கு ரூ.1 லட்சம் காசோலையை நேற்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். காசோலையை பெற்றுக்கொண்ட முத்தமிழ்ச்செல்வி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், பிளாட்டினம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த 9 மாதங்களில் 5 கண்டங்களில் ஏறி சிகரத்தை தொட்டு 6வது முறையாக அண்டார்டிகா செல்ல உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதனைப் பெண் முத்தமிழ்ச்செல்விக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.