புதுடெல்லி: மணிப்பூரின் ஜிரிபாமில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி போரேபெக்ரா பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பராக் ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கை கையிலெடுத்த தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மிசோரமின் ஐஸ்வாலில் இருந்து அசாம் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின் பேரில் தங்க்லியன்லால் ஹமர் என்ற முக்கிய குற்றவாளியை என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில் இதே பகுதியில் உள்ள மொய்னாதோல் கிராமத்தில் இருந்து மற்றொரு குற்றவாளியான லால்ரோசாங் மற்றும் அசாமின் கச்சாரை சேர்ந்த தில்கோஷ் கிராண்ட் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் வியாழனன்று கைது செய்தனர்.