டெய்ர் அல்-பலா: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 36 பாலஸ்தீனியர்கள் ெகால்லப்பட்டனர். 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காசாவின் பல இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 36 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். காசா நகரம், டெய்ர் அல்-பலா மற்றும் முவாசி ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
மத்திய காசாவில் உள்ள அவ்தா மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்கு நகரமான கான் யூனிஸின் மேற்கே உள்ள முவாசி பகுதியில் உள்ள வீடு தாக்கப்பட்டதில் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது குழந்தை உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். கான்யூனிசில் நடந்த தாக்குதலில் 11 பேரும், மற்ற இடங்களில் 14 பேரும் கொல்லப்பட்டனர்.


