சென்னை: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் மாணவாகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த மாணவர்கள் மீது அமெரிக்க காவல் துறை தாக்குதல் நடத்தியது. இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க துணை தூதரத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி பெருநகர காவல்துறை உத்தவுப்படி வழக்கத்தை விட கூடுதலாக அங்கு 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் திட்டமிட்டப்படி இந்திய மாணவர் சங்கத்தின் சென்னை மாவட்ட குழு சார்பில் மாணவிகள் உட்பட 30 பேர், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சிக்னல் அருகே நேற்று ஒன்று கூடினர். பின்னர் அனைவரும் அமெரிக்காவை கண்டித்து பதாகைகளுடன் அண்ணா மேம்பாலம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் மாணவர்கள் தூதரகம் நோக்கி செல்ல முயன்றதால் அவர்களை கைது செய்தனர்.