பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.10: பொம்மிடி அருகே 3வயது குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொம்மிடி அருகே ஜாலியூரை சேர்ந்தவர் பழனி(32). கூலி தொழிலாளியான இவரது மனைவி சம்பூர்ணம்(25). இவர்களுக்கு 3வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி பழனி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலை வீடு திரும்பியபோது, சம்பூர்ணம் மற்றம் குழந்தையை காணவில்லை. இதையடுத்து, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொம்மிடி போலீசில் பழனி புகார் தெரிவித்தார். அதில், வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ்(எ) இன்பத்தமிழன் என்பவர் தனது மனைவியை குழந்தையுடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


