மதுரை, ஏப்.18: சுற்றுலா அலுவலர் பாலமுருகன் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் ‘சித்திரைச் சுற்றுலா கலை விழா 2024’ வரும் ஏப்.21 துவங்கி ஏப்.25 வரை 5 நாட்களுக்கு நடக்கிறது. திருமலை நாயக்கர் மகாலில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் இந்த கலை விழா நடக்கிறது. பரத நாட்டியம், பல்சுவை கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தோற்பாவை கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். கூடுதல் விபரங்களுக்கு 0452 2334757 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
+
Advertisement