Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

15 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி தொடங்க வாய்ப்பு: உய்யக்கொண்டான் பாசன குளத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும்

தஞ்சாவூர், செப். 27: வாழவந்தன்கோட்டை ஏரியில் தண்ணீரை திறந்து உய்யக்கொண்டான் பாசன குளத்தில் விட்டு 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காப்பாற்ற தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.எஸ் முகமது இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திலும் தஞ்சாவூர் ஒன்றியத்திலும் சுமார் 36 பாசன ஏரிகளை நம்பி சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் உள்ளது. அந்த பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் இன்னும் சம்பா சாகுபடிக்கான விதைகள் விதைக்காமல் உள்ளது. இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய முடியுமா என கேள்வியாக உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள வாழவந்தான்கோட்டை ஏரி சுமார் 200 ஏக்கர் நிலம் பரப்பில் மிக பெரிய பாசன ஏரி ஆகும்.

இந்த ஏரிக்கு தமிழக அரசு மேட்டூர் அனை திறந்து பிறகு கல்லணை கால்வாய் திறந்தும் வாழவந்தான் கோட்டை ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஏரியும் நிரம்பி தற்போது ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால் திருச்சி மாவட்டத்தின் எல்லையில் இந்த ஏரி உள்ளதால் நீர் முழுவதும் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டு சம்பா சாகுபடி நெல் விதைகள் தெளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட பொது பணி துறை அதிகாரிகள் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். ஆனால் வாழவந்தான்கோட்டை ஏரியில் உய்யக்கொண்டான் வாய்க்கால்கள் தலைப்பில் ஷட்டர் மூடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு தற்போது ஷட்டர் திறக்காமல் உள்ளதால் இந்த வாய்க்கால்கள் மூலம் தஞ்சாவூர் பூதலூர் தஞ்சாவூர் ஒன்றியத்தில் உள்ள ஆயக்கட்டு உள்ளிட்ட சுமார் 36 பாசன ஏரிகளையும் நம்பி உள்ள பூதலூர் ஒன்றியம் மற்றும் தஞ்சாவூர் ஒன்றியத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சம்பா சாகுபடி நெல் பயிர்கள் நட தண்ணீர் இல்லாமல் ஏரிகள் வறண்டு காய்த்து உள்ளது. இந்த ஆண்டு சம்பா சாகுபடி நெல் பயிர்கள் செய்ய முடியுமா முடியாதா என விவசாயிகள் மத்தில் மிகவும் பெரிய கவலையாக உள்ளது. எனவே தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தஞ்சாவூர் ஒன்றியத்தில் உள்ள உய்யக்கொண்டான் பாசன ஏரிகளுக்கு உடனடியாக தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டு 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.