Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு

வேலூர், ஜூன் 3: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு யூரியா உரம் 1225 டன் யூரியா காட்பாடிக்கு ரயிலில் நேற்று வந்தது. இவை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக உரம், பூச்சி மருந்துகள், அடி உரம், தெளிப்பு மருந்துகள் போன்றவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சென்னை, தூத்துக்குடி நகரங்களில் இருந்து யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் சரக்கு ரயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த உரங்கள் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கூட்டுறவு உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மணலிருந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, காம்ப்ளக்ஸ் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 1225 டன் யூரியா நேற்று ரயிலில் காட்பாடிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உரமூட்டைகள் லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘காட்பாடி ரயில் நிலையத்திற்கு மொத்தம் 1225 டன் யூரியா உரம் ரயிலில் வந்தது. இவை அனைத்தும் தனியார் உரக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் 186 டன் யூரியா, திருப்பத்தூர் 226 டன் யூரியா, ராணிப்பேட்டை 712 டன் யூரியா, காஞ்சிபுரம் 101 டன் யூரியா என மொத்தம் 1225 டன் உரங்கள் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் பெற்று கொள்ளலாம்’ என்றனர்.