திருச்செங்கோடு, ஜூன் 18: திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரை சேர்ந்த கூலி வேலை செய்யும் தம்பதிக்கு, 11 வயதில் 6ம் வகுப்பு படித்து வரும் மகள் உள்ளாள். கடந்த சில நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த நல்லமுத்து (35), என்ற கூலி தொழிலாளி சிறுமியிடம் செல்போனை கொடுத்து, அங்குள்ள கோயிலுக்கு தூக்கிச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், திருச்செங்கோடு புறநகர் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நல்லமுத்துவை தேடி வருகின்றனர். சிறுமியை மீட்ட போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
+
Advertisement