சேலம், ஜூலை 11: சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த கோயிலில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி 13ம் தேதி 1008 கலசாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக 12ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கும்பலங்காரம், கணபதி யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 13ம் தேதி 1008 கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
+
Advertisement