Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

₹80 லட்சத்தில் விரைவில் ரவுண்டானா  விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு செப்.6ல் சிறப்பு கடன் மேளா

கரூர், ஆக. 26: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகமாகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இந்த கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை, சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.கரூர் கிளை அலுவலகத்தில் (5வது கிராஸ், செங்குந்தபுரம்) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா செப்டம்பர் 6ம்தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த சிறப்பு தொழில் கடன் விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (முலதனமானியம்) வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரு 75 லட்சம் வரை மற்றும் மாநில முதலீட்டு மானியமாக 25 சதவீதம் இயந்திரங்களின் மதிப்பில் அதிகபட்சமாக ரூ. 150 லட்சம் வரை இந்த சிறப்பு தொழில் முகாமில் வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தகவல்களுக்கு 04324&235581 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.