போச்சம்பள்ளி, ஜூலை 11: போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள், பேருந்துகள் என ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. நான்கு வழிச்சாலை பிரதான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், காவல் துறை சார்பில் டூவீலர் ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தும், கார்களில் வருபவர்கள் சீட்பெல்ட் அணிந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அவ்வழியாக டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் எஸ்.ஐ.பச்சமுத்து, மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


