நாகப்பட்டினம், ஜன.17: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி செட்டித்தெரு சுனாமி குடியிருப்பு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டி நடந்தது. வேளாங்கண்ணி செட்டித்தெரு சுனாமி குடியிருப்பு பகுதியில் கவுன்சிலர் வெற்றிவேல் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டி நடந்தது. விளைாட்டுப்போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவருமான தாமஸ்ஆல்வாஎடிசன் பரிசுகள் வழங்கினார். வேளாங்கண்ணி பேரூராட்சி திமுக செயலாளர் மரிய சார்லஸ், கந்தையன், ஸ்டாலின் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
+
Advertisement