தேனி, ஜூலை. 19: மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளதாவது: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்க உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். எனவே, வேலைநாடுநர்கள் தங்களது பயோடேட்டா நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.