குன்னம், ஜன. 25: குன்னம் அருகே வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் குன்னம் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் பணிக்குழு சிறப்பு ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு குன்னம் தொகுதி பொறுப்பாளர் ஏ.கே.அருண் முன்னிலை வகித்தார். தேர்தல் பணிக்குழு கூட்டம் திருமாந்துறை, லப்பைக் குடிக்காடு, ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர், அகரம்சீகூர், வதிஷ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, நன்னை, கீழப்புலியூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது . கூட்டத்தில் மாவட்ட தொண்டராணித் தலைவர் பெரு கருப்பையா
லப்பைக்குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், துணைத் தலைவர் ரசூல் அகமத், ஒகளுர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் அறங்காவலர் குழு தலைவர் கவியரசன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகம், நன்னை சின்னு, கீழப்புலியூர் செல்வராஜ், குன்னம் சட்டமன்ற தொகுதி ஐடி பொறுப்பாளர் சிவனேசன், பொறுப்பாளர்கள் மீனா தங்கராசு. சிவகுமார், விஜயகுமார், சுந்தரம் ,ராஜா, ராஜேஷ் உட்பட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


