உடன்குடி, ஆக. 2: வேப்பங்காடு கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளின் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளார் ஜான்பால் அடிகளார் தலைமை வகித்தார். உடன்குடி வட்டார கல்வி அலுவலர் டக்ளஸ் ஆல்பட்ராஜ், நங்கைமொழி பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ், தூய இருதயமாதா ஆலய நிர்வாகி சகாய ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லி வரவேற்றார்.
விழாவில் விளையாட்டு, கல்வியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள் மெர்லின், ஜோனி, ஸ்டாலின், ஜெசிந்தாராணி, ராஜேஸ்வரி, ரகுராணி மற்றும் பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவஇருதய ஆல்பர்ட் நன்றி கூறினார்.


