Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநாட்டிலிருந்து மகள் வந்தால் தான் மனைவியின் சடலத்தை எடுப்பேன்

கள்ளக்குறிச்சி, ஜூன் 21: கள்ளக்குறிச்சி நகராட்சி கருணாபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வருபவர் குப்பன். இவருடைய மனைவி இந்திரா (50), இவரும் கூலி வேலை செய்து வருகிறார். தினந்தோறும் உடல் அசதிக்காக சாராயம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட இந்திரா நேற்று முன்தினம் சாராயம் குடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இவருடைய மகள் கோமதி (34) என்பவர் குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். தாய் உயிரிழப்பு சம்பவத்தை கேட்டு வெளிநாட்டிலிருந்து கண்ணீர் மல்க வீடியோ கான்பரன்சிங் மூலமாக தந்தை மற்றும் உறவினர்களிடம் பேசினார். கோமதி குவைத்தில் இருந்து தனது தாயின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரவேண்டும் என்றும் இதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். தனது மகள் கோமதியை அழைத்து வர தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அத்துடன் தனது மகள் கோமதி வரும் வரை மனைவி இந்திராவின் சடலத்தை எடுக்கப் போவதில்லை எனவும் கண்ணீர் மல்க கூறினார்.