ஈரோடு, ஜூலை 25: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு நேற்று முன்தினம் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில், பங்கேற்க வெப்பிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,130 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.24.25க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.50க்கும், சராசரி விலையாக ரூ.24.90க்கும் ஏலம் மூலமாக விற்பனையானது. இதில், மொத்தம் 1,532 கிலோ எடையிலான தேங்காய்கள் விற்பனையாகின. இவற்றின் விற்பனை மதிப்பு ரூ.38 ஆயிரத்து 188 ஆகும். என விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவிதார்.