ஓசூர், மே 20: ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில், தட்சிண திருப்பதி வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் மூலவருக்கு பால், தயிர், நெய், இளநீரால் அபிஷேகம் மற்றும் கீர்த்தனைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஓசூர், சூளகிரி தாலுகா, தேன்கனிக்கோட்டை, மற்றும் பெங்களூர் பகுதியிலிருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை காமன் தொட்டி வெங்கடேஷ், பத்மாவதி மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
+
Advertisement


