சேலம், ஜூலை 5: சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவர் தனது நண்பருடன் வின்சென்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 500 ரூபாய் கொடுத்தால் பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சீரங்கபாளையம் விநாயகர் கோயில் அருகேயுள்ள வீட்டில் இரண்டு பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அங்கிருந்த 2 பெண்களை மீட்டு புரோக்கராக செயல்பட்ட விஜி, செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட பெண்கள் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் ஸ்பா என்ற பெயரில் விபசாரம் நடைபெறுகிறதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
+
Advertisement


