Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரம் பெட்ரோல் பங்க்கில் ரூ.6.50 லட்சம் கையாடல்: ஊழியருக்கு போலீஸ் வலை

விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம் பெட்ரோல் பங்க்கில் ரூ.6.50 லட்சத்தை கையாடல் செய்த ஊழியரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதில் மேல்தெருவை சேர்ந்த முகமதுநிசான்(38) என்பவர் கடந்த 6 மாதமாக பெட்ரோல்போடும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் பணியிலிருந்த போது ஜிபே மூலம் ரூ.6,50,000 பணத்தை கையாடல் செய்துள்ளார். இதுகுறித்த பெட்ரோல் பங்க் மேலாளர் சண்முகம் அளித்தபுகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.