Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம், ஆக. 1: விழுப்புரம் அருகே கிணறு வெட்டியதற்கான கூலியை தர மறுத்ததால் 2 பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் 20 பேர் குமார் தலைமையில் மனு கொடுக்க விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது மனு கொடுக்க வந்தவர்களில் லட்சுமி, அஞ்சலி ஆகியோர் திடீரென உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் கொண்டு வந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் கிணறு ஆழப்படுத்தும் ெதாழில் செய்து வருகிறோம். விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டுவதற்கு தொடர்பு கொண்டபோது ஆர்சி மேலகொந்தை பகுதியில் நிலம் இருப்பதாகவும், அந்த இடத்தில் கிணறு வெட்ட ஒரு கன அடிக்கு ரூ.40 என்று பேசி ஒப்பந்தம் செய்து. கடந்த 20ம்தேதி முதல் வேலையை தொடங்கினோம். 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். கடந்த 25ம் தேதி பணியை முடிக்கும் தருவாயில் 91,632 கன அடிக்குண்டான ரூ.36 லட்சம் கூலிதொகையை கேட்டபோது அவர் தரமறுத்து அதிகாரத்தோடு பேசி அனுப்பி விட்டார்.

இதுகுறித்து கடந்த 27ம் தேதி விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தபோது பொதுப்பணித்துறை அளவீடு செய்து அறிக்கை தருவார், அதன்மூலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்படி கிணற்ைற அளவீடு செய்து அறிக்கையை காவல் துறையினரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் நாங்கள் கிணறு வெட்டியதற்கான கூலியை வழங்காமல் அதிகாரத்தை வைத்து கொடுக்க மறுத்து வருகிறார். நாங்கள் 50 பேர் குழந்தைகளுடன் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வருதால் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தரவேண்டுமென அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது. முறைப்படி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.