விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம் அருகே வெடி வைத்து நாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். யோகா ஆசிரியர். இவர் நாய் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீதியில் வெடி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அவர் வளர்த்து வந்த நாய் வாயில் வெடி வெடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ஆசாகுளம் நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த சந்திரன் என்பவர் இறந்த கோழி குடலில் பூண்டு வெடியை வைத்து வெடிக்கச் செய்து நாயை படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆதிநாராயணன் அளித்த புகாரின் பேரில் நரிக்குறவர் சந்திரன் மீது விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.