விருத்தாசலம், ஜூலை 24:விருத்தாசலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் விருத்தாசலம் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
தொடர்ந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி, ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று பகல் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சென்றுவிட்டு திரும்ப தங்களது பகுதிகளுக்கு செல்வதற்காக விருத்தாசலம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பல பகுதிகளில் காத்திருந்த பயணிகள் மற்றும் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.