Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விஜயமங்கலம் பாரதி பள்ளி 10, 11ம் வகுப்பு அரசு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்

பெருந்துறை, மே 19: பெருந்துறை, விஜயமங்கலம் பராதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள், 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். 10ம் வகுப்பில், இப்பள்ளி மாணவி நேகா, 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள், தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 பெற்றுள்ளார். ரக்சன், 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பவிஷ் மற்றும் வர்ஷினி ஆகியோர் 494 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.

மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 48 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 201 பேரும் பெற்றனர். 11ம் வகுப்பில், இப்பள்ளி மாணவி தனுஷியா, 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று, ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, இயற்பியல்-100, வேதியியல்-99, கணினி அறிவியல்-100 பெற்றுள்ளார். தர்சினி, 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், கவுதம் 591 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளார். 12ம் வகுப்பு, சந்தியா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று பெருந்துறை தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளித்தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.