ஊத்தங்கரை, ஏப்.27: ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பெரிய குட்டகுளத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் இளம்பரிதி (43). இவர் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவரது நிலத்தை அளப்பதற்காக, நேற்று முன்தினம், அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன் (48), அவரது மனைவி சக்தி (43) ஆகியோர், இளம்பரிதியை வழிமறித்து, நிலம் அளவீடு செய்வது தொடர்பாக கேட்டு தகாத வார்த்தையால் திட்டினர். இதுபற்றி இளம்பரிதி, கல்லாவி காவல் நிலையத்தில், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அவர்கள் மீது புகார் அளித்தார்.
+
Advertisement


