தேவதானப்பட்டி, ஏப். 24: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் கண்ணன்(53). இவர் வீடு கட்டுவதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். தொடர்ந்து மாதந்தோறும் தவணை கட்டிவந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 மாதமாக தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வத்தலக்குண்டு தனியார் நிதிநிறுவன ஊழியர் பெரியகுளம் எ.புதுப்பட்டியைச் சேர்ந்த பிரவீன் என்பவர், நேற்று முன்தினம் கண்ணன் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கண்ணனின் மகன் பன்னீர்செல்வம்(27) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் தனியார் நிதிநிறுவன ஊழியர் பிரவீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


