சேலம், ஏப்.11: ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(29). கூலித்ெதாழிலாளியான இவர், மேச்சேரி பகுதியில் கூலித்தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் கொண்டதால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மிகுந்த சோகத்துடன் இருந்து வந்த மாதேஷ், மேச்சேரியில் உள்ள சுடுகாட்டில் உள்ள மரச்சட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மேச்சேரி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


