மதுரை, ஏப். 25: மதுரையில், கள்ளத் தொடர்பு விவகாரத்தில் நடந்த கொலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை, ஆழ்வார்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மதுமிதா. இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த கார்த்திக் அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கார்த்திக்கும் அவரது நண்பரான சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சோனைமுத்து (28) என்பவரும் வைகை ஆற்று பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது முன்விரோதம் எதிரொலியாக அங்கு வந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்கை கத்தியால் குத்தியுள்ளனர். இதை தடுத்த ேசானைமுத்துவுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி சோனைமுத்து இறந்தார். கார்த்திக் ெதாடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மதிச்சியம் போலீசார், சதீஷை கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய அவரது நண்பர்கைள தேடி வருகின்றனர்.
+
Advertisement