Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாகன சோதனையில் ரூ.1.27 லட்சம் சிக்கியது

பண்ருட்டி, மார்ச் 25: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பண்ருட்டியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பண்ருட்டி-சென்னை சாலை ராசாப்பாளையம் அருகே நிலையான கண்காணிப்பு குழு அலுவலரும், வேளாண்மை துறை அலுவலருமான விஜய் தலைமையிலான, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனை செய்தனர்.

அதில், எந்தவித ஆவணமும் இன்றி ரூ. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், சிதம்பரத்தை சேர்ந்த கவரிங் நகை வியாபாரி மாரிமுத்து என்பதும், இந்த தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பறக்கும் படையினர் ரூ1,27,500 பணம் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.