செய்துங்கநல்லூர், நவ. 19:வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது செவிலியர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலரிடம் உள்ள கோப்புகளை பார்வையிட்டு பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தார். மேலும் 15வது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.71.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகம் மற்றும் அலுவலக கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவற்றையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் மகப்பேறு பிரசவ வார்டை ஆய்வு செய்தார். அப்போது வைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கர், கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத், ஆழிகுடியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பாலப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
+
Advertisement


