விருதுநகர், மார்ச் 8: விருதுநகர் மாவட்ட வேளாண் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் மார்ச் 18ம்தேதி காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


