Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை உற்சவம் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்

காஞ்சிபுரம், மே 22: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று கருடசேவை உற்சவம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை நிகழ்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி, காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதுடன், அதிகாலை 4 மணிக்கு மேல் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் இன்று (22ம்தேதி) நடைபெறுகிறது. வரும் 26ம்தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இவ்விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி ேமாகன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரதராஜ பெருமாள் கோயிலில், கருடசேவை உற்சவம் மற்றும் தேரோட்டம் விழாவின்போது, 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ேமலும், இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

தற்காலிக பேருந்து நிலையம்

சுவாமி ஊர்வலத்துக்கு இடையூறு இல்லாமல் பழைய ரயில் நிலையம், புதிய ரயில் நிலையம், ஒலிமுகமதுபேட்டை சந்திப்பு, ஓரிக்கை சந்திப்பு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறநகர் பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்கள் வரை மட்டுமே பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். கார் உள்ளிட்ட வாகனங்களும் சுவாமி ஊர்வலம் வரும் நேரங்களில் அந்த வழிகளில் அனுமதிக்கப்படாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.