Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லால்குடியில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி

பெரம்பலூர், ஜூன் 5: 2025-2026ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி இலால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இலால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப்பயிற்சி நிலையமான பெரம்பலூரில் 2025-2026-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மைபட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் வழங்கப்பட்டு மாணவர்சேர்க்கை 20.06.2025 வரைநடைபெறுகிறது.

பயிற்சியில் சேருவதற்கு 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மாணவர் சேர்க்கைக்கான குறைந்த கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி (10+2) தேர்ச்சிபெற்றவர்கள், அல்லது (10+2) கல்வி முறையில் தேர்ச்சிபெற்ற இளங்கலைபட்டதாரிகள் அல்லது பத்தாம் வகுப்பு மூன்றாண்டு பட்டயப்படிப்பு (Diploma) பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு (Graduate(PG/UG)) முடித்தவர்கள் (10+3+3) விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.100/- மற்றும் பயிற்சிக்கட்டணம் ரூ.20750 ஆக கூடுதல்தொகை ரூ.20850/- ஆகும். கட்டணம் இணையவழி மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். பயிற்சிக்கட்டணம் ஒரே தவணையில் செலுத்தவேண்டும். விண்ணப்பங்கள் www.tncu.tn.gov.in என்ற இணைய வழிமூலம் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 20.06.2025 மாலை 5 .00 மணிவரைமட்டுமே.

பயிற்சிக்கான பாடங்கள் பயிற்சிகாலம் மற்றும் இதரவிவரங்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி இலால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பயிற்சி நிலையம், துறைமங்கலம் 3 ரோடு, நேஷனல் ITI வளாகம், பெரம்பலூர் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8220039204, 9487440624 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும், அரியலூர் மாவட்ட மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அரியலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.