வெள்ளக்கோவில், மார்ச் 23:முத்தூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் நேற்று எள் ஏலம் நடைபெற்றது. இதில், முத்தூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் 19 பேர் 37 மூட்டைகளில் 2751 கிலோ எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.182க்கும் குறைந்தபட்சமாக ரூ.90.99க்கும் சராசரியாக ரூ.163க்கும் ஏலம் போனது.
மொத்தம் 2751 கிலோ எள் ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 225க்கு ஏலம் போனது.


