போடி, ஜூலை 22: சின்னமனூர் அருகே அய்யம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரமேஷ்(32). இவர்கள் போடி அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பரமசிவம், தர்மர், தங்கம் ஆகியோரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தில் சொட்டு பாசனம் அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது உதவியாளருடன் நிலத்திற்கு சென்ற போது மோட்டார் பைப்கள் உடைக்கப்பட்டு, வயர்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து போடி நீதிமன்றத்தில் ரமேஷ் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் படி, எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.