Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேலமாங்காவனம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் சோதனை சிலிண்டர் திருடிய வாலிபர் கைது

திருச்சி ஜூன் 19: திருச்சி ரங்கத்தில் சில்ண்டர் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி ரங்கம் வீரேஸ்வரம் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). கூலித் தொழிலாளி. இவர் தனது மூத்த சகோதரனின் மகனின் திருமணத்திற்காக தனது உறவினர்களிடமிருந்து 2 எரிவாயு சிலிண்டர்களைப் வாங்கினார். பின்னர் சிலிண்டர்களை பயன்படுத்திய பிறகு, ஜூன் 16ம் தனது வீட்டின் முன் காலி சிலிண்டர்களை வைத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் சிலிண்டர்களைத் திருடி ஆட்டோவில் ஏற்றி சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் ரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கீழ சிந்தாமணி அன்னை சத்யாநகர் பகுதி சேர்ந்த ஆண்ட்ரூ (36) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு காலி சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.