மேட்டூர், அக்.11: மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் நேற்று மேட்டூர் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை முறைகள் மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். ஒரு சில பகுதிகளில் மின்விசிறிகள் இயங்காமல் இருந்தன. அதனை பழுது நீக்க நடவடிக்கை மேற்கொண்டார். மருத்துவமனை வளாகம் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். மருந்து வழங்கும் இடம், சித்தா பிரிவு, பிசியோதெரபி பிரிவு, யோகா ஆகிய பிரிவுகளை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, மருத்துவர் கனியமுது, சித்தா மருத்துவர் ஜெயக்குமார், பிசியோதெரபி மருத்துவர் கலைச்செல்வி, செவிலியர் கண்காணிப்பாளர் ராணி, மேட்டூர் நகர பாமக செயலாளர் மதியழகன், நகர தலைவர் சந்திரசேகரன் உடனிருந்தனர்.
+
Advertisement


