கடவூர், டிச. 7: கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி ஊராட்சி உத்தமகவுண்டனூர் பகுதியில் உள்ள நடுக்களத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (66). இவர், நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மதியம் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் மாரியம்மாளிடம் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார்.
இதனால் அருகில் உள்ள வீட்டில் குடி தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு இருந்த மர்ம நபர் திடீர் என்று மாரியம்மாளை கீழே தள்ளிவிட்டு காதில் அணிந்து இருந்த 2 கிராம் தங்கத்தோடு, 2 கிராம் தங்க மாட்டல் மற்றும் மூக்கில் அணிந்து இருந்த 2 கிராம் தங்க மூக்குத்தி ஆகியவற்றை பிடுங்கிவிட்டு தப்பி ஓடிவிட்டர். இதனால் மாரியம்மாள் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.