மூணாறு, ஜூலை 11: மூணாறு மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள மாட்டுப்பட்டி, தேவிகுளம், சின்னக்கானல், தலையாறு, செண்டுவாரை உள்ளிட்ட பல எஸ்டேட் பகுதிகளில், சமீப நாட்களாக புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு உட்பட்ட மாட்டுப்பட்டி எஸ்டேட் டாப் டிவிஷனில் நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதிக்கு அருகே புலி நடமாட்டம் இருப்பதாக, அதன் கால் தடத்தை கண்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த வனத்துறையினர் பகுதியில் உள்ள கால் தடத்தை வைத்து புலி நடமாட்டம் இருப்பதாக உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேச்சலுக்குச் சென்ற பசு மாட்டை புலி தாக்கியுள்ளது. மேலும் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 18 பசு மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் இங்கு நடமாடும் புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
+
Advertisement