Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் சேகரிக்கும் பணி தீவிரம்

வலங்கைமான், செப். 14: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் சேகாரம் செய்யும் பணியினை வலங்கைமான் நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வலங்கைமான் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் உட்கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அரசு சாலைகளின் இரு புறங்களிலும் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி சாலை ஓர மரம் மின்விளக்கு கம்பங்கள் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசும் பணி மழைநீர் வடிகால்கள் சீர் செய்யும் பணி வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும்பணி மரம் மற்றும் மின் கம்பங்களுக்கு ஒளிரும் பட்டைகள் பொருத்தும் பணி சிறு பாலங்கள் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து நீர்வழிப் பாதைகளை தடை இன்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்கும் பணி மழைக்காலாங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் சேகாரம் செய்யும் பணிகள் நடக்கிறது.

கோட்ட பொறியாளர் இளம்வழுதி உத்தரவின்பேரில் குடவாசல் உதவி கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் வலங்கைமான் இளநிலை பொறியாளர் நவீன்குமார் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சாலை ஆய்வாளர் மற்றும் சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.