Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு

கரூர், மே 24: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்கள், 24, 25ம் கல்வியாண்டிற்கு தங்களது சிறார்கள் பல்வேறு கல்விகளில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்று ஆன்லைன் https://esmwel.tn.gov.in மூலம் விண்ணப்பித்து, பெற்றிட வழிமுறைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சார்ந்தோர் சான்று பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திற்கு வர இயலும் பட்சத்தில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து சார்ந்தோர் சான்று பெற்றிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தின் எண், முன்னாள் படைவீரர் படைவிலகல் சான்று மற்றும் நகல், அடையாள அட்டை, இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப் பெண் பட்டியல், 10ம் வகுப்பு பள்ளி மாற்று சான்று நகல், மகன், மகள் பெயர் தனியே பார்ட்மற்றும்11 ஆர்டர் பப்ளிகேஷன் செய்யப்பட்டிருந்தால் மேலும், விபரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431 296079 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.