புதுக்கோட்டை, ஜூலை 16: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-2025-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை அறிவிப்பில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற் பயிற்சி சான்று பெற்றிருப்பின், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும் என முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்கள் எவரேனும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற் பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அதன் விவரத்தினை உரிய ஆவணங்களுடன் 24.7.2024-ம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.