முத்துப்பேட்டை, ஜூலை 6: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா செல்லும் வழியில் கடந்த ஜூன் 12ம் ந்தேதி, இரு சக்கர வாகனத்தில் ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (28), என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி ரோடு, குமாரய்யா மகன் வசந்த் (எ) வசந்தகுமார்(25) என்ற பிரபல ரவுடியை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், தீயிட்டு கொளுத்துதல் உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருவாரூர் எஸ்பி கருண் கரட் பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
+
Advertisement


