திருப்பூர், மார்ச் 10: முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் மத்திய மாவட்ட திமுக, தெற்கு மாநகர திமுக, திமுக மருத்துவரணி சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் கருமாரம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வராஜ் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ் குமார், வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் திலகராஜ், பகுதி செயலாளர் மு.க.உசேன், 34வது வட்ட செயலாளர் இளங்கோ, 34வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த முகாமில் கண் பரிசோதனை, காது மூக்கு தொண்டை பிரச்னைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.