காவேரிப்பட்டணம், ஏப்.27: காவேரிப்பட்டணம் பேரூராட்சி சார்பில், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் மஞ்சப்பை விருது பெற்ற நல்லாசிரியர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைமை எழுத்தர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வாரச்சந்தை பகுதியில் நிறைவடைந்தது. பேரணியின் போது 500க்கும் மேற்பட்டவர்களுக்கு துண்டுபிரசுரங்கள், மஞ்சப்பைகள் வழங்கி முழக்கமிட்டனர். நிகழ்ச்சியில், பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். துப்புரவு மேற்பார்வையாளர்கள் சுரேஷ், சீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வேடியப்பன், சக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
+
Advertisement


