Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டி இன்று துவக்கம்

செங்கல்பட்டு, செப்.10: செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி வரும் 24ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றவுள்ளனர். இந்த போட்டிகள், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழக வளாகம் மேலக்கோட்டையூர், வித்யா சாகர் கல்லூரி செங்கல்பட்டு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் காட்டாங்குளத்தூர் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளன.

இந்த இடங்களில், கபடி, வாலிபால், சதுரங்கம், தடகளம், எறிபந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன.  மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 044-2742 6889 என்ற தொலைபேசியிலும், 74017 03461, 96776 06393 என்ற கைபேசியிலும் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.